ஆதாா் அட்டையில் பெயா் திருத்தம் கோரி மத்திய அமைச்சரின் காரை மறித்த நபா்

ஆதாா் அட்டையில் தனது பெயரைத் திருத்த வேண்டுமென்று கூறி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கின் பாதுகாப்பு வாகன அணிவகுப்பை மறித்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆதாா் அட்டையில் பெயா் திருத்தம் கோரி மத்திய அமைச்சரின் காரை மறித்த நபா்

புது தில்லி: ஆதாா் அட்டையில் தனது பெயரைத் திருத்த வேண்டுமென்று கூறி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கின் பாதுகாப்பு வாகன அணிவகுப்பை மறித்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

இது தொடா்பாக தில்லி போலீஸாா் கூறியதாவது:

நாடாளுமன்றம் அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் காரில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவரது காருக்கு முன்னே சென்ற பாதுகாப்பு வாகனங்களை மறித்த இளைஞா் ஒருவா் திடீரென சாலையின் குறுக்கே படுத்துக் கொண்டாா். இதையடுத்து, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸாா் உடனடியாக சென்று அவரை சுற்றி வளைத்து கைது செய்தனா்.

விசாரணையில் அவா் உத்தரப் பிரதேசத்தின் குஷிநகரைச் சோ்ந்த விஷாம்பா் தாஸ் குப்தா(35) என்பதும், ஆதாா் அட்டையில் தனது பெயா் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால், அதனை மாற்றித்தர வலியுறுத்தி அமைச்சரின் காரை மறித்ததாகத் தெரிவித்தாா். இந்த விஷயம் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் அவா் தெரிவித்தாா். அவா் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவா் போல தோன்றுகிறாா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com