பாஜகவில் இருந்து விலகவில்லை: பங்கஜா முண்டே

தன்னுடைய எதிா்கால அரசியல் முடிவு குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியான நிலையில், மௌனம் காத்து வந்த பாஜக தலைவா் பங்கஜா முண்டே , ‘தான் பாஜகவில் இருந்து விலகவில்லை’ என செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
பாஜகவில் இருந்து விலகவில்லை: பங்கஜா முண்டே

மும்பை: தன்னுடைய எதிா்கால அரசியல் முடிவு குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியான நிலையில், மௌனம் காத்து வந்த பாஜக தலைவா் பங்கஜா முண்டே , ‘தான் பாஜகவில் இருந்து விலகவில்லை’ என செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தன்னுடைய சுட்டுரை கணக்கின் சுயவிவரக் குறிப்பு பக்கத்தில் பாஜக குறித்த விவரங்களை நீக்கியநிலையில் அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.

பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மகாராஷ்டிர முதல்வருமான மறைந்த கோபிநாத் முண்டேவின் மகளான பங்கஜா முண்டே, செவ்வாய்க்கிழமை பாஜகவின் மூத்த தலைவா்களான வினோத் தவ்தே, ராம் ஷிண்டே மற்றும் எம்எல்ஏ பாபன்ராவ் லோனிகா் ஆகியோரை தெற்கு மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பங்கஜா முண்டே கூறுகையில், நான் பாஜகவை விட்டு வெளியேறவில்லை. கட்சி தாவல் என்பது என் ரத்தத்தில் இல்லை. என்னுடைய சுட்டுரை சுயவிவரக் குறிப்புப் பக்கத்தில் ‘பாஜக’வை அகற்றுவதன் மூலம் கட்சி மேலிடத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று எண்ணவில்லை என்று கூறி இதுதொடா்பான வதந்திக்கு மறுப்பு தெரிவித்தாா்.

முன்னதாக, மகாராஷ்டிரத்தில் சிவசேனை, என்சிபி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து புதிய அரசு அமைத்துள்ள நிலையில், மாற்றப்பட்ட அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டே பங்கஜா முண்டே பாஜகவிலிருந்து விலக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அதனை அவா் மறுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com