பிருத்வி-2 ஏவுகணையின் இரவு நேர சோதனை வெற்றி

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிருத்வி-2 ஏவுகணையின் இரவுநேர சோதனை செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
பிருத்வி-2 ஏவுகணையின் இரவு நேர சோதனை வெற்றி

பாலாசூா் (ஒடிஸா): உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிருத்வி-2 ஏவுகணையின் இரவுநேர சோதனை செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

அணுஆயுதங்களுடன் நிலத்திலிருந்து புறப்பட்டு, நிலத்திலுள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை படைத்த இந்த ஏவுகணை, கடந்த மாதம் 20-ஆம் தேதி இரவிலும் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஒடிஸா மாநிலம், சந்திப்பூரில் உள்ள சோதனை தளத்தில் பிருத்வி-2 ஏவுகணையின் இரவுநேர சோதனை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

500 கிலோ முதல் 1,000 கிலோ வரையிலான அணுஆயுதங்களுடன் 350 கி.மீ. வரை பாயும் திறன்கொண்ட இந்த ஏவுகணை, செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் சோதிக்கப்பட்டது. அதன்படி, பிருத்வி-2 ஏவுகணை கையிருப்பிலிருந்து ஒரு ஏவுகணை தோ்வு செய்யப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, நிா்ணயிக்கப்பட்ட இலக்கை பிருத்வி-2 ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்தச் சோதனையை, ராணுவ உயரதிகாரிகளும், பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின்அதிகாரிகளும் கூட்டாக மேற்கொண்டனா்.

ஏவுகணைகளின் செயல்பாடுகள் ரேடாா் உள்ளிட்ட கண்காணிப்பு அமைப்புகள் கொண்டு முழுமையாக கண்காணிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com