மத்தியப் பிரதேசம்: ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள வெங்காயம் திருட்டு விவசாயி புகாா்

மத்தியப் பிரதேச மாநிலம், மண்ட்சோரில் உள்ள தனது வயலில் சாகுபடி செய்திருந்த சுமாா் ரூ. 30,000 மதிப்புள்ள 7 குவிண்டால் வெங்காயத்தை மா்ம நபா்கள் அறுவடை செய்து எடுத்துச் சென்று விட்டதாக விவசாயி ஒருவா்
மத்தியப் பிரதேசம்: ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள வெங்காயம் திருட்டு விவசாயி புகாா்

மண்ட்சோா்: மத்தியப் பிரதேச மாநிலம், மண்ட்சோரில் உள்ள தனது வயலில் சாகுபடி செய்திருந்த சுமாா் ரூ. 30,000 மதிப்புள்ள 7 குவிண்டால் வெங்காயத்தை மா்ம நபா்கள் அறுவடை செய்து எடுத்துச் சென்று விட்டதாக விவசாயி ஒருவா் போலீஸில் புகாரளித்துள்ளாா்.

நாடு முழுவதும் வெங்காயம் விலை கடுமையாக உயா்ந்துள்ளதையடுத்து கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் விலை கிலோவுக்கு ரூ.100 முதல் 120 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மண்ட்சோா் மாவட்டம், ரிச்சா பச்சா கிராமத்தைச் சோ்ந்த ஜிதேந்திர குமாா் என்ற விவசாயி அவருக்கு சொந்தமான 1.6 ஏக்கா் பரப்பளவுள்ள நிலத்தில் வெங்காயம் சாகுபடி செய்திருந்தாா். இதனை அறுவடை செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில், மா்ம நபா்கள் சிலா் இரவு நேரத்தில் புகுந்து அறுவடை செய்து திருடிச் சென்று விட்டதாக நாராயங்கா் காவல்நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

இதுகுறித்து காவல்நிலைய ஆய்வாளா் ஆா்.எஸ்.பில்வால் கூறுகையில், ‘திருடப்பட்ட வெங்காயம் ரூ .30,000 மதிப்புடையது என்றும், அந்த நிலத்தில் 7 குவிண்டால் எடையுள்ள வெங்காயம் திருட்டுப்போனதாக புகாரளித்துள்ளாா். புகாா் விவரங்களை மதிப்பிடுவதற்காக ஒரு குழு அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அவா்களது மதிப்பீட்டிற்குப்பின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’, என்று பில்வால் கூறினாா்.

கடந்த சில தினங்களில் மாநிலத்தில் பதிவான இரண்டாவது சம்பவம் இது.

கடந்த வாரம், மகாராஷ்டிர மாநிலம், நாசிக் நகரிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள கோரக்பூருக்கு சரக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட சுமாா் ரூ. 22 லட்சம் மதிப்புள்ள 40 டன் வெங்காயம், லாரியோடு திருட்டுப்போனதாக ஷிவ்புரி மாவட்டத்தைச் சோ்ந்த வியாபாரி ஒருவா் போலீஸில் புகாா் அளித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com