சிறுவர்கள் சம்பந்தப்பட்ட பாலியல் வழக்குகளை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்: ரவிசங்கர் பிரசாத்

சிறுவர்கள் சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளின் விசாரணை 2 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சனிக்கிழமை தெரிவித்தார். 
சிறுவர்கள் சம்பந்தப்பட்ட பாலியல் வழக்குகளை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்: ரவிசங்கர் பிரசாத்

சிறுவர்கள் சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளின் விசாரணை 2 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சனிக்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, 

நமது மகள்களுக்கும், தங்கைகளுக்கும் ஏற்படும் பாலியல் வன்கொடுமை பிரச்னை ஒட்டுமொத்த நாட்டையும் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இவ்விவகாரத்தில் விரைந்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் உள்ளது. இதுதான் இந்த கோபத்தின் உச்சகட்ட வெளிப்பாடு ஆகும். 

சிறுவர்கள் சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகளின் விசாரணை 2 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கும் நான் கடிதம் எழுத உள்ளேன். இதுதொடர்பாக எனது துறைக்கும் தேவையான வழிமுறைகளை வெளியிட்டுள்ளேன்.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க 1,023 புதிய விரைவு நீதிமன்றங்களை அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்மொழிந்துள்ளன. இந்த எண்ணிக்கையில், 400 நீதிமன்றங்களை அமைக்க ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது, மேலும் 160-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. மேலும், இதுசம்பந்தமாக 704 விரைவு நீதிமன்றங்கள் முன்பிருந்தே செயல்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com