தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அரவிந்த் கேஜரிவால் நேரில் சந்தித்து ஆறுதல்: ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

தீ விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அரவிந்த் கேஜரிவால் நேரில் சந்தித்து ஆறுதல்: ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

தில்லி ஜான்சி ராணி வணிகப் பகுதியில் அமைந்துள்ள அனாஜ் மண்டி எனும் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மின்கசிவுக் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்காலம் என்று கூறப்படுகிறது. மேலும் தில்லி தீ விபத்து தொடர்பாக கட்டட உரிமையாளர் மீது 304 சட்டப்பிரிவின் கீழ் தில்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் தற்போது தலைமறைவாகி உள்ளார்.

இந்நிலையில், தீ விபத்தில் பாதிக்கப்பட்டு எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஒருவருக்கு 50 சதவீதத்துக்கும் மேலான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. 8 பேர் மூச்சுத்திணறல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. இது மிகவும் வருத்தத்துக்குரிய சம்பவமாகும். தீ விபத்து தொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கவும், சிகிச்சைக்கான முழுச் செலவை தில்லி அரசு ஏற்கும் என்றும் அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com