காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து ஒரு குண்டு கூட சுடப்படவில்லை: அமித் ஷா

காஷ்மீர் பள்ளத்தாக்கின் நிலைமை முற்றிலும் இயல்பாக உள்ளது. அங்கு ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 
காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து ஒரு குண்டு கூட சுடப்படவில்லை: அமித் ஷா

காஷ்மீர் பள்ளத்தாக்கின் நிலைமை முற்றிலும் இயல்பாக உள்ளது. அங்கு ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பேசியதாவது,

காஷ்மீர் பள்ளத்தாக்கின் நிலைமை முற்றிலும் இயல்பாக உள்ளது. ஆனால், காங்கிரஸின் நிலையை இயல்பாக்க என்னால் முடியாது. ஏனென்றால் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் அங்கு மிகப்பெரிய அளவிலான வன்முறைச் சம்பவங்களை காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்தது. ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை, துப்பாக்கியில் இருந்து ஒரு குண்டு கூட சுடப்படவில்லை. போலீஸ் துப்பாக்கிச் சூடு காரணமாக ஒருவர் கூட உயிரழக்கவில்லை

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது, 99.5 சதவீத மாணவர்கள் தேர்வு எழுதினர், ஸ்ரீநகரில் சுமார் 7 லட்சம் நோயாளிகள் தற்போது வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்து காவல் நிலையப் பகுதிகளிலில் இருந்தும் ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் அரசியல் தலைவர்களை தேவையின்றி சிறை வைக்க வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு இல்லை. சரியான நேரத்தில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள், அதில் ஒருநாள் கூட தாமதம் இருக்காது. ஃபரூக் அப்துல்லாவின் தந்தையை அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு தான் 11 வருடங்கள் சிறையில் அடைத்தது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். அதுபோன்ற செயல்களில் பாஜக ஒருபோதும் ஈடுபடாது என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com