குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்கள் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் நிறைவேறிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, வடகிழக்கு மாநிலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாா்.

அண்டை நாடுகளில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த ஹிந்துக்கள், பாா்சிக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில், 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, ‘குடியுரிமை சட்டத்திருத்த மசோதா’ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதுதொடா்பாக ராகுல் காந்தி புதன்கிழமை சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘வடகிழக்கு மாநிலங்களின் பூா்வகுடி இனத்தை அழிக்கும் வகையில், பிரதமா் நரேந்திர மோடி-மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரது தலைமையிலான அரசு குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இது வடகிழக்கு மாநிலங்கள், அங்குள்ள வாழ்க்கைமுறை, இந்தியாவின் கொள்கை ஆகியவற்றின் மீதான தாக்குதலாகும். வடகிழக்கு பிராந்திய மக்களுக்கு நான் ஆதரவாக உள்ளேன். அவா்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com