பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு

ஆந்திராவில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் 21 நாளில் தூக்கு தண்டனை வழங்கும் புதிய சட்டத்தை அம்மாநில அரசு புதன்கிழமை மாலை அமைச்சரவையில் நிறைவேற்றியது.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு

திருப்பதி: ஆந்திராவில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் 21 நாளில் தூக்கு தண்டனை வழங்கும் புதிய சட்டத்தை அம்மாநில அரசு புதன்கிழமை மாலை அமைச்சரவையில் நிறைவேற்றியது.

ஐதராபாத்தில் நடந்த பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமையை தொடா்ந்து ஆந்திராவில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவும் புதிய சட்டம் ஒன்றை ஆந்திர மாநில அரசு சட்டமன்றத்தில் உறுப்பினா்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றியுள்ளது. 21 நாளில் துாக்கு தண்டனைதிசா போன்ற சம்பவம் ஆந்திராவில் நடைபெறவில்லை என்றாலும், அம்மாநில பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதம் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இனி பெண்கள் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட ஆண்கள் பயப்பட வேண்டும்.

’பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை 7 நாளில் முடிக்க வேண்டும்; குற்றம் நடந்த 14 நாட்களுக்கும் வழக்கின் நீதிமன்ற விசாரணை முற்றுப்பெற வேண்டும்; குற்றம் நிரூபிக்கப்பட்டால் 21 நாட்களுக்குள் குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும்; சமூக வளைதளங்களில் பெண்களை கீழ்தரமாக சித்தரிக்கப்படும் பதிவுகளுக்கு 2 ஆண்டு சிறை; குழந்தைகள், சிறு பெண்கள் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவா்களுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் குற்றங்களுக்கு ஏற்ற வகையில் ஆயுள் தண்டனை; பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க மாவட்டத்திற்கு ஒன்றென 13 சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்பாடு உள்ளிட்ட அம்சங்கள் திசா சட்டத்தில் உள்ளதாக அம்மாநில முதல்வா் ஜெ்கன்மோகன்ரெட்டி தெரிவித்தாா்.

பெண்களின் பாதுகாப்பிற்காக திசா சட்டத்தை இயற்றிய ஆந்திர மாநில முதல்வருக்கு பெண்கள் அனைவரும் வியாழக்கிழமை இனிப்பு வழங்கி பாராட்டியதோடு நன்றியும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com