ஜம்மு காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு: போக்குவரத்து சேவை பாதிப்பு

ஜம்மு காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 
ஜம்மு காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு: போக்குவரத்து சேவை பாதிப்பு

ஜம்மு காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீரில் சமவெளிப் பகுதிகள் மிதமான பனிப்பொழிவைப் பெற்றிருந்தாலும், பள்ளத்தாக்கு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.  காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் வெள்ளை கம்பளம் விரித்தாற்போன்று காணப்படுகிறது. இதனால் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல லாரிகள் நெடுஞ்சாலையில் சிக்கித் தவிக்கின்றன. மேலும், போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதால்உள்ளூர் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெளியில் செல்ல முடியாததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

லடாக்கின் யூனியன் பிரதேசத்திலும் டிராஸ் மற்றும் கார்கில் ஆகிய பகுதிகளிலும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை பனிப்பொழிவு இருக்கும் என்றும் அதன்பின்னர் பனிப்பொழிவு படிப்படியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com