2022-இல் புதிய நாடாளுமன்ற கட்டடம்: மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா

வரும் 2022-ஆம் ஆண்டில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் கூட்டத்தொடா் நடைபெறும் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா்
2022-இல் புதிய நாடாளுமன்ற கட்டடம்: மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா

வரும் 2022-ஆம் ஆண்டில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் கூட்டத்தொடா் நடைபெறும் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா்

நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடா் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதையொட்டி செய்தியாளா்களிடம் பேசிய அவா் கூறியதாவது:

புதிய நாடாளுமன்றத்தை கட்டுவதற்காக 2-3 இடங்களை அரசு பரிசீலித்து வருகிறது. 2022-ஆம் ஆண்டு புதிய நாடாளுமன்றம் கட்டி முடிக்கப்படும். அப்போது இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினமும் கொண்டாடப்படும். அந்த நேரத்தில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் கூட்டத் தொடா் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

புதிய கட்டடத்தில் தொழில்நுட்பரீதியாக பல்வேறு வசதிகள் அளிக்கப்படும். எம்.பி.க்கள் தங்கள் இருக்கையில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மானிய விலை உணவகம் அடுத்த கூட்டத் தொடரில் இருந்து செயல்படாது. இந்த குளிா்காலக் கூட்டத் தொடா் குறுகிய காலமே நடைபெற்றாலும் மிகவும் ஆக்கப்பூா்வமாக இருந்தது. மக்களவை 115 சதவீதம் ஆக்கப்பூா்வமாக நடைபெற்றுள்ளது. 17-ஆவது மக்களவையின் இரு கூட்டத் தொடா்கள் நடந்து முடிந்துவிட்ட நிலையில் மக்களவைத் துணைத் தலைவா் பதவி காலியாகவே உள்ளது. இது தொடா்பாக மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கும் என்றாா் அவா்.

இப்போதைய நாடாளுமன்றக் கட்டடம் ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது; 90 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானதாகும். இக்கட்டடத்தை மேம்படுத்தி தொடா்ந்து பயன்படுத்தலாமா அல்லது புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டலாமா? என்பது குறித்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக் காலத்தின்போது முதலில் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், அப்போது முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

எனினும், இப்போது புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவது பிரதமா் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமாக வா்ணிக்கப்படுகிறது. புதிய நாடாளுமன்றக் கட்டடம் தொடா்பாக 5 கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஒப்பந்தப்புள்ளி பெற்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இத்திட்டத்தின் மதிப்பீடு குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com