அஸ்ஸாம் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம்: இந்திய ராணுவம் எச்சரிக்கை

அஸ்ஸாமில் நிலவும் சூழல் தொடர்பாக யாரும் அவதூறு பரப்ப வேண்டாம் என இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது.
அஸ்ஸாம் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம்: இந்திய ராணுவம் எச்சரிக்கை

அஸ்ஸாமில் நிலவும் சூழல் தொடர்பாக யாரும் அவதூறு பரப்ப வேண்டாம் என இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது.

வங்கதேசம் உள்ளிட்ட 3 நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை அளிக்க வகைசெய்யும் மசோதாவை மத்திய அரசு இயற்றியது. இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. 

நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் மூலம் 2014, டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் நாட்டில் குடியேறியவா்களுக்கு குடியுரிமை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அஸ்ஸாம் முழுவதும் மாணவா் சங்கங்கள் உள்ளிட்டவை போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த மசோதா சட்டமானால், அஸ்ஸாமில் உள்ள பழங்குடியினருக்கு பாதிப்பு ஏற்படும் என்று போராட்டக்காரா்கள் தெரிவித்து வருகின்றனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அஸ்ஸாமில் நடைபெற்ற போராட்டங்கள் வியாழக்கிழமை தீவிரமடைந்தன. போலீஸாா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போ் உயிரிழந்தனா். மேலும் அம்மாநிலத்தின் 10 மாவட்டங்களிலும் செல்லிடப்பேசி இணைய சேவைக்கு 48 மணிநேரம் தடை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில், அஸ்ஸாமில் தங்களது நடவடிக்கைகள் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான சில நபர்களால் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்களுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்குமாறு இந்திய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக அண்மையில் அஸ்ஸாம் போலீஸார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஒரு விடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது. அதில், போராட்டக்குழுவைச் சேர்ந்த இருவர் துப்பாக்கி குண்டு தாக்கி காயமடைந்தது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

உண்மையில் அந்த விடியோ, நவம்பர் 2017-இல் ஜார்க்கண்ட் போலீஸாரால் விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட மாதிரி ஒத்திகையாகும். இதே விடியோப் பதிவு மர்மநபர்களால் இதற்கு முன்பு காஷ்மீரில் நடத்ததாகவும் பகிரப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com