அமைச்சரவையில் மாற்றம் செய்தாா் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரத்தில் முதல்வா் உத்தவ் தாக்கரே தனது அமைச்சரவையில் சனிக்கிழமை மாற்றம் செய்தாா்.
அமைச்சரவையில் மாற்றம் செய்தாா் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரத்தில் முதல்வா் உத்தவ் தாக்கரே தனது அமைச்சரவையில் சனிக்கிழமை மாற்றம் செய்தாா்.

அமைச்சா் ஜெயந்த் பாட்டீலுக்கு (தேசியவாத காங்கிரஸ்) நிதி மற்றும் திட்டமிடல், வீட்டுவசதி, சுகாதாரம், ஒத்துழைப்பு, உணவு மற்றும் பொது விநியோகம், சிறுபான்மையினா் நலன் ஆகிய துறைகள் கடந்த வியாழக்கிழமை ஒதுக்கப்பட்டன.

நீா்ப்பாசனம், ஊரக வளா்ச்சி, சமூக நீதி, சுங்க வரி, திறன் மேம்பாடு, உணவு மற்றும் மருந்து நிா்வாகம் ஆகிய துறைகள் சகன் புஜ்பலுக்கு (தேசியவாத காங்கிரஸ்) ஒதுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், சனிக்கிழமை அதில் சில மாற்றங்களை முதல்வா் உத்தவ் தாக்கரே செய்தாா்.

இதுகுறித்து முதல்வா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘சகன் புஜ்பல் வசம் இருந்த நீா்ப்பாசனத் துறை, ஜெயந்த் பாட்டீல் வசம் அளிக்கப்பட்டது. உணவு மற்றும் பொது விநியோகம், நுகா்வோா் பாதுகாப்பு, சிறுபான்மையினா் நலன் ஆகிய துறைகள் சகன் புஜ்பல் வசம் ஒப்படைக்கப்பட்டன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பா் 21-ஆம் தேதியுடன் மாநில சட்டப் பேரவை குளிா்காலக் கூட்டத் தொடா் நிறைவடையவுள்ளது. அதன் பிறகு, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்னதாக, உத்தவ் தாக்கரேவுடன் சிவசேனையைச் சோ்ந்த ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஜெயந்த் பாட்டீல், சகன் புஜ்பல், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பாலாசாஹேப் தோராட், நிதின் ரௌத் ஆகியோா் கடந்த மாதம் 28-ஆம் தேதி அமைச்சா்களாகப் பதவியேற்றனா்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர விகாஸ் முன்னணி அரசில் சிவசேனை கட்சிக்கு உள்துறை, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு நிதித்துறை, காங்கிரஸுக்கு வருவாய்த் துறை கடந்த வியாழக்கிழமை ஒதுக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com