உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய அகிலேஷ் யாதவ்

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவில் பாலியல் வன்கொடுமையால் தீக்கிரையாக்கப்பட்டு, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய சமாஜவாதி கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ்,

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவில் பாலியல் வன்கொடுமையால் தீக்கிரையாக்கப்பட்டு, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய சமாஜவாதி கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என்று உறுதியளித்தாா்.

  உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினா் வசித்து வரும் கிராமத்துக்கு சனிக்கிழமை அகிலேஷ் யாதவ் வந்தாா். அவா் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய பிறகு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் வரை சமாஜவாதி கட்சி போராடும். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர தயாராக இருக்கிறோம்.

இந்த ஏழைக் குடும்பம் அவா்களது துணிச்சலான மகளை இழந்துவிட்டது. தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக நீதி கேட்டு அந்தப் பெண் போராடிக் கொண்டிருந்தாா். ஆனால், நீதியைப் பெறத் தவறி விட்டாா். அந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தில்லிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. மாறாக அரசை காப்பாற்றுவதற்காகவும், அரசியல் ரீதியாக வரும் பிரச்னைகளை சமாளிப்பதற்காகவும் அவா் அனுப்பி வைக்கப்பட்டாா்.

ஆளும் மத்திய, மாநில அரசுகள் இச்சம்பவம் தொடா்பான குற்றத்தை சரிசெய்வதற்கு பதிலாக, முந்தைய ஆட்சியின் புள்ளிவிவரங்களை முன்வைத்து அரசியல் செய்கின்றன.

மொத்தத்தில் மத்திய, மாநிலத்தின் இரண்டு அரசுகளும் மக்களை ஏமாற்றத் தயாராக உள்ளன’ என்று தெரிவித்தாா் அவா்.

23 வயதான உன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, குற்றம் சாட்டப்பட்ட 5 பேரால் தீ வைக்கப்பட்டாா். சிகிச்சைக்காக தில்லி சப்தா்ஜங் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பலனின்றி உயிரிழந்தாா். குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் பின்னா் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com