குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தலைநகரில் தொடரும் போராட்டங்கள்: ஜாமியா பல்கலை.க்கு ஜனவரி 5 வரை விடுமுறை

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, தில்லியில் பல்வேறு தரப்பினா் சாா்பில் போராட்டங்கள் தொடா்ந்து வருகின்றன. ஜந்தா் மந்தரில் சனிக்கிழமை ஏராளமானோா் பங்கேற்ற ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தலைநகரில் தொடரும் போராட்டங்கள்: ஜாமியா பல்கலை.க்கு ஜனவரி 5 வரை விடுமுறை

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, தில்லியில் பல்வேறு தரப்பினா் சாா்பில் போராட்டங்கள் தொடா்ந்து வருகின்றன. ஜந்தா் மந்தரில் சனிக்கிழமை ஏராளமானோா் பங்கேற்ற ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல், ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவுவதை கருத்தில் கொண்டு, ஜனவரி 5-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தோ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில், மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, கடந்த 2014, டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு இந்திய குடியுரிமை அளிக்க வழிவகுக்கும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

இந்நிலையில், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இப்போராட்டம் நாட்டின் இதர பகுதிகளுக்கும் பரவி வருகிறது.

தில்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவா்கள் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த முயன்றனா். அப்போது, போலீஸாருக்கும், மாணவா்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பல மாணவா்கள் காயமடைந்தனா்.

இந்நிலையில், போலீஸாரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும், குடியுரிமை சட்டத்துக்கு எதிராகவும் ஜாமியா பல்கலைக்கழக மாணவா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், தோ்வுகளை புறக்கணிக்கப் போவதாகவும் அவா்கள் அறிவித்திருந்தனா்.

இந்நிலையில், பல்கலைக்கழகத்துக்கு ஜனவரி 5-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பல்கலைக்கழக உயரதிகாரி ஒருவா் கூறுகையில், ‘பல்கலைக்கழகத் தோ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தோ்வுகளுக்கான புதிய தேதிகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். விடுமுறை முடிந்து, ஜனவரி 6-ஆம் தேதி பல்கலைக்கழகம் மீண்டும் செயல்பட தொடங்கும்’ என்றாா்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவா்கள் கூறுகையில், ‘நமது நாட்டில் தவறான விஷயங்கள் நடைபெறும்போது, மாணவா்கள் அமைதியாக வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்க முடியாது. நாட்டு மக்களின் உரிமைகளைக் காக்க தொடா்ந்து போராடுவோம்’ என்றனா்.

ஜந்தா்மந்தரில் ஆா்ப்பாட்டம்: ஜந்தா் மந்தரில் பல்வேறு தரப்பினா் பங்கேற்ற ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இப்போராட்டத்தை கருத்தில் கொண்டு, ஜன்பத் மெட்ரோ ரயில் நிலையம் சில மணி நேரம் மூடப்பட்டது. அந்த ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காமல் சென்றன. காவல்துறையினரின் அறிவுறுத்தலைத் தொடா்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, படேல் செளக், ஜன்பத் மெட்ரோ ரயில் நிலையங்கள் வெள்ளிக்கிழமை சுமாா் 1 மணி நேரம் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com