போராட்டம்: ஏழு தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் காரணமாக ஏழு மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் வியாழக்கிழமை மூடப்பட்டன.
போராட்டம்: ஏழு தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்

புது தில்லி: குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் காரணமாக ஏழு மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் வியாழக்கிழமை மூடப்பட்டன.

"லால் குயிலா, ஜமா மஸ்ஜித், சாந்தினி சௌக், விஷ்வவித்யாலயா ஆகிய ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையங்களில் ரயில்கள் நின்று செல்லாது" என்று டி.எம்.ஆர்.சி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், ஜாமியா மில்லியா இஸ்லாமியா, ஜசோலா விஹார் ஷாஹீன் பாக் மற்றும் முனீர்கா ஆகிய ரயில் நிலையங்களின் வாயில்களும் மூடப்பட்டன. இந்த ரயில் நிலையங்களிலும் ரயில்கள் நின்று செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com