2020-21ம் நிதியாண்டில் ஜி.எஸ்.டி இழப்பீடு இரட்டிப்பாகும் 9 மாநிலங்கள்

2020-21ம் நிதியாண்டில் 9 பெரிய மாநிலங்களில் இந்தத் தொகை இரட்டிப்பாகும் என்று ஐ.சி.ஆர்.ஏ(ICRA) வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி

2020-21ம் நிதியாண்டில் 9 பெரிய மாநிலங்களில் இந்தத் தொகை இரட்டிப்பாகும் என்று ஐ.சி.ஆர்.ஏ(ICRA) வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டதையடுத்து, அதனால் ஏற்பட்ட நிதி இழப்பை மத்திய அரசு இழப்பீடு தொகையாகத் தர மாநில அரசுகள் கோரிக்கை வைத்து வருகின்றன. அதன்படி, கர்நாடகா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய 9 மாநிலங்களுக்கான, ஜி.எஸ்.டி இழப்பீடு 2020ம் நிதியாண்டில் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் இரண்டு மடங்காக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த 9 மாநிலங்களின் இழப்பீட்டுத் தொகை ரூ.60 ஆயிரம் கோடி முதல் ரூ.70 ஆயிரம் கோடி வரை அதிகரிக்கலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிலுவைத் தொகையை விரைந்து வழங்கும்படி மாநில அரசுகள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பது மத்திய அரசுக்கு மேலும் நிதி நெருக்கடியை அளிக்கும் என்றே கூறப்படுகிறது.

அதே நேரத்தில், மத்திய அரசு இந்தத் தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்காவிட்டால் அந்தந்த மாநில பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை உருவாகும். இதனால், மத்திய அரசு இந்த நிதி நெருக்கடி நிலையை சமாளிக்க தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com