உத்தரப்பிரதேச வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் வன்முறையாக மாறியதில் உத்தரபிரதேசத்தில் 8 வயது சிறுவன் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
Citizenship (Amendment) Act
Citizenship (Amendment) Act

லக்னௌ: குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் வன்முறையாக மாறியதில் உத்தரபிரதேசத்தில் 8 வயது சிறுவன் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

மீரட் மாவட்டத்தில் மட்டும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.  வாராணசியில் ஒரு வன்முறைக் கும்பலை காவல்துறையினர் விரட்டிச் சென்ற போது, நெரிசலில் சிக்கி சிறுவன் உயிரிழந்துள்ளான். 

நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர், மாநிலத்தில் பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கு, போலீசாருடன் நடந்த மோதலில் 6 பேர் உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டும், வாகனங்களை தீ வைத்து எரித்தும் வன்முறையில் ஈடுபட்டதால், சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்ட துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த வன்முறைகள் காபரணமாக இதுவரை மாநிலத்தில் பிஜ்னோர், சம்பல், ஃபிரோசாபாத், கான்பூர், வாராணசி மற்றும் மீரட் ஆகிய இடங்களில் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com