முஸ்லிம்கள் புறக்கணிப்பு ஏன்? மேற்குவங்க பாஜக துணைத் தலைவர் கேள்வி

முஸ்லிம்கள் புறக்கணிப்பு ஏன்? மேற்குவங்க பாஜக துணைத் தலைவர் கேள்வி

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு ஏன்? என மேற்குவங்க பாஜக துணைத் தலைவர் சந்திர குமார் போஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு ஏன்? என மேற்குவங்க பாஜக துணைத் தலைவர் சந்திர குமார் போஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டதாவது,

குடியுரிமைத் திருத்தச் சட்டம் வெளிப்படைத்தன்மை நிறைந்தது. குறிப்பாக ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸீக்கள் மற்றும் ஜெயினர்கள் என யாருக்கும் எதிரானது அல்ல என்றால் அதில் முஸ்லிம்களை இணைக்காமல் புறக்கணிப்பது ஏன்? 

இந்தியாவை வேறு எந்த நாட்டுடனும் ஒப்பிட வேண்டாம். ஏனென்றால் இங்கு அனைத்து மதங்களும், சமூகங்களும் சமமானது. முஸ்லிம்கள் பெரும்பான்மை நாடுகளில் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென்றால், அவர்கள் இங்கு அகதிகளாக வர வாய்ப்பில்லை. எனவே இதில் முஸ்லிம்களை இணைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் வசிக்கும் பலூசிஸ்தான் மற்றும் அகமதியர்களுக்கு எதிரான நிலை என்ன? எனவே முஸ்லிம் அகதிகளால் பாதிப்பு என்பதில் முற்றிலும் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார்.

சுபாஷ் சந்திர போஸ் கொள்கைகளை முன்னிலைப்படுத்தும் பாஜக, அனைவரிடமும் சமமான போக்கை கையாண்டு, அனைவரது வளர்ச்சிக்காகவும் பணியாற்றினால் மேற்கு வங்கத்தில் 2021-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் எளிதில் வெற்றிபெறலாம். இதில் இதர பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கத் தேவையில்லை என மேலும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com