166 ஆண்டுகால இந்திய ரயில்வே வரலாற்றில் இதுவே முதன்முறை: பியூஷ் கோயல் பெருமிதம்!

166 ஆண்டுகால இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக, நடப்பு நிதியாண்டில் (2019-20) பயணிகள் இறப்பு பூஜ்ஜியமாக உள்ளது என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


166 ஆண்டுகால இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக, நடப்பு நிதியாண்டில் (2019-20) பயணிகள் இறப்பு பூஜ்ஜியமாக உள்ளது என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதிவு செய்துள்ள டிவீட்டில்,

"பாதுகாப்புதான் முதன்மை: 166 ஆண்டுகால இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக, நடப்பு நிதியாண்டில் பயணிகள் இறப்பு பூஜ்ஜியமாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்புக்காக மிக உயர்ந்த தரத்தை பின்பற்றுவது குறித்து மத்திய அரசிடம் தில்லி உயர்நீதிமன்றம் அறிக்கை கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com