பெங்களூருவில் மிராஜ் 2000 ரக போர் விமானம் விபத்து: 2 விமானிகளும் பலி

பெங்களூருவி உள்ள எச்ஏஎல் விமான தளத்தில் இருந்து வழக்கமான ரோந்துப் பணிக்குச் சென்ற மிராஜ் 2000 சிறிய ரக போர் விமானம் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு விமானிகளும் உயிரிழந்தனர்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், இன்று காலை 10.30 மணியளவில் இந்திய ஆயுதப் படைக்கு சொந்தமான மிராஜ் 2000 ரக போர் விமானம் விமான தளத்தில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானம் தரையில் விழுவதற்கு முன்பே விமானத்தில் இருந்த 2 விமானிகளும் வெளியே குதித்தனர். எனினும், அவர்கள் இருவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com