சுடச்சுட

  

  ரஃபேல் ஒப்பந்தத்தில் பாரிக்கருக்கு தெரியாதது.. அம்பானிக்குத் தெரிந்தது.. ராகுல் பகீர் தகவல்கள்

  By PTI  |   Published on : 12th February 2019 07:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Rahul_Gandhi_used_a_fresh_media_report_to_allege_PM


  புது தில்லி: ரஃபேல் ஒப்பந்தத்தில், அனில் அம்பானியின் தரகர் போல பிரதமர் மோடி செயல்பட்டுள்ளார் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் பகீர் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார்.

  இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, இந்தியா - பிரான்ஸ் இடையே நடந்த  இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்பே, இந்த ஒப்பந்தம் தனக்குக் கிடைக்கப் போகிறது என்று தொழிலதிபர் அனில் அம்பானி அறிந்திருந்தார் என்பதை மின்னஞ்சல் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.

  பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கருக்குக் கூட தெரியாத சில தகவல்கள், ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பே அனில் அம்பானிக்குத் தெரிந்திருக்கிறது. இது அரசுப் பணிகள் தொடர்பான ரகசியம் காக்கும் சட்டத்துக்கு எதிரான செயலாகும். இதற்காகவே மோடியை சிறையில் அடைக்கலாம் என்று கூறியிருக்கும் ராகுல், மோடி ஒருவரால் மட்டுமே இந்த ஒப்பந்தம் பற்றி அம்பானியிடம் சொல்லியிருக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

  மேலும், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக சிஏஜி தாக்கல் செய்யும் அறிக்கையை நாங்கள் ஏற்கப்போவதில்லை என்றும், அது பிரதமர் மோடி எனும் காவல்காரரின் கணக்கு தணிக்கையாளர் தாக்கல் செய்யும் அறிக்கை என்றும் ராகுல் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai