திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ கொலை: முன்ஜாமீன் கோரி முகுல் ராய் மனு

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ சத்யஜித் பிஸ்வாஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்படுள்ள பாஜக மூத்த தலைவர் முகுல்


மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ சத்யஜித் பிஸ்வாஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்படுள்ள பாஜக மூத்த தலைவர் முகுல் ராய், முன் ஜாமீன் கோரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கிருஷ்ணகஞ்ச் தொகுதி எம்எல்ஏ சத்யஜித் பிஸ்வாஸ் (41), நாடியா மாவட்டத்தின் புல்பாரி பகுதியில் சரஸ்வதி பூஜை விழா பந்தலில் கடந்த சனிக்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, பாஜக மூத்த தலைவர் முகுல் ராய் உள்பட 4 பேர் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கு பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கியை போலீஸார் கைப்பற்றினர்.
முதல்கட்ட விசாரணையில், இந்த கொலை சம்பவம் நன்கு திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், கொலை  வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள முகுல் ராய் முன்ஜாமீன் கோரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக அவரது வழக்குரைஞர் சுபாஷிஷ் தாஸ்குப்தா தெரிவித்தார்.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக முகுல் ராய் மீது பொய்க் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், திரிணமூல் காங்கிரஸிலிருந்து அவர் வெளியேறி பாஜகவில் இணைந்த பிறகு முகுல் ராய் மீது இதுவரை 25 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யான முகுல் ராய், அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com