ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது வெடிகுண்டு தாக்குதல்: 18 பேர் பலி
By DIN | Published on : 14th February 2019 04:58 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் அவந்திபுரா பகுதியில் சி.ஆர்.பி.எப் படை வீர்ரகளின் அணி ஒன்று வியாழன் அன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது.
அப்போது அவர்களின் வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் 'திடீர்' வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள்.
எதிர்பாராத இந்த தாக்குதலில் 18 வீரர்கள் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.
பலத்த காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
அந்த ரோந்து வாகனத்தில் 20-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முஹம்மது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.