லோக்பால் தலைவர், உறுப்பினர் பதவி: புதிதாக விண்ணப்பிக்க அரசு அறிவுறுத்தல்

லோக்பால் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட முந்தைய தேடுதல் குழுவின் பதவிக் காலம் முடிவடைந்து விட்டதால்,


லோக்பால் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட முந்தைய தேடுதல் குழுவின் பதவிக் காலம் முடிவடைந்து விட்டதால், அந்த அமைப்பின் தலைவர், உறுப்பினர்கள் பொறுப்பில் சேர விரும்புவோர் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அரசியல் தலைவர்கள், அரசு உயரதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு லோக்பால், லோக் ஆயுக்த அமைப்புகளை உருவாக்குவதற்கு வகை செய்யும் சட்டம், கடந்த 2013-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அதன்பிறகு, லோக்பால் அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர் பொறுப்பில் சேர விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பம் பெற கடந்த 2014-ஆம் ஆண்டில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. இதனிடையே, சில சட்ட சிக்கல்கள் காரணமாக, லோக்பால் அமைப்பது தாமதமானது.
இதையடுத்து, லோக்பால் அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்து பரிந்துரைப்பதற்காக, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தலைமையில் 8 உறுப்பினர்களைக் கொண்ட தேடுதல் குழு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் முதல் கூட்டம், கடந்த ஜனவரி 29-ஆம் தேதி நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, அந்தக் குழுவின் இரண்டாவது கூட்டம், தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.  அந்தக் கூட்டத்தில், முந்தைய குழுவின் பதவிக்காலம் முடிவடைந்ததால், அந்தக் காலகட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களை செல்லாதவை என அறிவிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. எனினும், தகுதியுடையவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்பால் தேடுதல் குழுவின் அடுத்த கூட்டம், வரும் 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com