காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல்: தலைவர்கள் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்களை பலிகொண்ட, பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மேற்கு வங்க முதல்வர்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட பகுதியில் குவிக்கப்பட்ட ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட பகுதியில் குவிக்கப்பட்ட ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர்.


ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்களை பலிகொண்ட, பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெஹபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா உள்பட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கெனீத் ஜஸ்டரும் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளை இந்தியா தோற்கடிக்க அமெரிக்கா துணை நிற்கும் என்று அவர் கூறியுள்ளார்.
சுட்டுரையில் அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், புல்வாமாவில் நமது வீரர்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலை அறிந்து வார்த்தைகளைக் கடந்து வேதனையடைந்தேன். அது கோழைத்தனமான தாக்குதல். இதுபோன்ற பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்த்து நமது படைகள் தொடர்ந்து போராடி, அவர்களை வீழ்த்தும் என்று கூறியுள்ளார்.
பயங்கரவாதத் தாக்குதலில் பலியான வீரர்களின் துணிவுக்கு தலைவணங்குவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பலியோனோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்றும் சுட்டுரைப் பதிவில் மம்தா குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலைவர் ஒமர் அப்துல்லா வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்து மோசமான செய்தி வந்திருக்கிறது. எண்ணற்ற வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜெய்ஷ்-ஏ-முஹம்மது அமைப்பு இதற்கு பொறுப்பேற்றுள்ளது. கடந்த 2004-05 காலகட்டத்தில் இருந்ததைப் போன்ற கருப்பு தினங்கள் திரும்புகின்றன என தெரிவித்துள்ளார்.
மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி வெளியிட்டுள்ள கண்டனச் செய்தியில், பயங்கரவாதிகளின் இந்தக் கோழைத்தனமான தாக்குதலைக் கண்டிக்க வார்த்தைகள் போதாது. இதுபோன்ற முட்டாள்தனமான நடவடிக்கைகளுக்கு இன்னும் எத்தனை உயிர்கள் மடியப் போகிறதோ? என்று குறிப்பிட்டுள்ளார்.
புல்வாமாவில் நிகழ்த்தப்பட்டுள்ளதைப் போன்ற தாக்குதல் இனி நிகழாத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடும்பத்தில் உள்ள அன்புக்குரியவர்களை இழந்தோரின் வலி என்னவென்பதை நன்றாக உணர முடிகிறது. பலி எண்ணிக்கை அதிகமாக இருப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. 
துணிவுமிக்க வீரர்களின் குடும்பத்துக்கு ஒட்டுமொத்த தேசமும் தோளோடு, தோளாக நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com