எல்லைப் பகுதியில் மீண்டும் அதிர்ச்சி: குண்டு வெடித்து ராணுவ மேஜர் உயிரிழப்பு

ரஜெளரி மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இந்திய ராணுவ அதிகாரியும், ராணுவ வீரர் ஒருவரும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 
எல்லைப் பகுதியில் மீண்டும் அதிர்ச்சி: குண்டு வெடித்து ராணுவ மேஜர் உயிரிழப்பு

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ரஜெளரி மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இந்திய ராணுவ அதிகாரியும், ராணுவ வீரர் ஒருவரும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, இந்திய எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகளால் தரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டை அப்புறப்படுத்தும் போது ராணுவ அதிகாரி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ராணுவ வீரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்திய எல்லைப்பகுதியில் 1.5 கி.மீ. உள்பகுதியில் ரஜௌரி மாவட்டத்தின் நௌஷெரா செக்டாரில் நடைபெற்ற கண்காகணிப்பு பணியின் போது பயங்கரவாதிகளால் தரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 2 குண்டுகள் கண்டறியப்பட்டன.

அதனை டேராடூனைச் சேர்ந்த மேஜர் சித்ரேஷ் சிங் பிஸ்ட், அதனை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். முதல் குண்டை வெற்றிகரமாக நீக்கியபோதும், 2-ஆவது குண்டை நீக்கும் போது உயிரிழந்தார்.

கடந்த வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதி நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், அதே பகுதியில் இரண்டாவது தாக்குதல் நடைபெற்றிருப்பது அப்பகுதியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com