'மேக் இன் இந்தியா' திட்டம் குறித்து பிரதமர் மோடி மீண்டும் சிந்திக்க வேண்டும்: ராகுல் ட்வீட்

வந்தே பாரத் ரயில், இன்று இயந்திரக் கோளாறு காரணமாக பாதி வழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
'மேக் இன் இந்தியா' திட்டம் குறித்து பிரதமர் மோடி மீண்டும் சிந்திக்க வேண்டும்: ராகுல் ட்வீட்

உத்தரப் பிரதேசத்தின் துண்ட்லாவில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில், இயந்திரக் கோளாறு ஏற்பட்டு பாதி வழியில் நிறுத்தப்பட்டது.

தில்லியில் இருந்து வாராணசி சென்றுவிட்டு, வாராணசியில் இருந்து ரயில் திரும்பி வரும் போது, கன்றுக்குட்டி மீது மோதியதால், ரயில் தண்டவாளத்தில் வழுக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் ரயில் சேவை பாதியில் நிறுத்தப்பட்டு, அதில் இருந்த பயணிகள் வேறு வேறு ரயில்களில் ஏறிச் சென்றனர்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல், தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளதாவது:

மேக் இன் இந்தியா திட்டம் தோல்வியடைந்துவிட்டதாக பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். எனவே மேக் இன் இந்தியா குறித்து பிரதமர் மோடி அவர்கள் மீண்டும் நன்கு சிந்திக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியும் மேக் இன் இந்தியா திட்டம் எவ்வாறு செயல்படப் போகிறது என்று மிகவும் ஆழமாக சிந்தித்து வருகிறது என்பதை தங்களுக்கு உறுதிபடுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, மணிக்கு 160 கிமீ பயணிக்கக் கூடிய வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வந்தே பாரத் என்ற ரயிலை சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில்பெட்டித் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) தயாரித்தது.

முழுவதும் குளிரூட்டப்பட்ட 16 பெட்டிகளைக் கொண்ட வந்தே பாரத் ரயிலில் 1,128 பயணிகள் பயணிக்கலாம். ரயில் பெட்டிகள் அனைத்திலும் தானியங்கிக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. 

ரயில் நிலையங்களின் வருகை குறித்து தகவல் தெரிவிக்கும் வசதியும், வை-ஃபை வசதியும் இந்த ரயிலில் உள்ளன. 

நவீன தொழில்நுட்பத்திலான கழிவறை, ஒவ்வொரு இருக்கைக்குக்கும் தனித்தனி மின்விளக்கு வசதி, ஒவ்வொரு பெட்டியிலும் குளிர்பான வசதிகள் என ரயில் முழுவதும் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com