கடந்த 5 ஆண்டுகளில் படிப்படியாக வருவாய் பெருகியுள்ளது: அருண் ஜேட்லி

பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பிறகான ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழுவுடனான பாரம்பரிய சந்திப்பு திங்கள்கிழமை நடைபெற்றது. 
கடந்த 5 ஆண்டுகளில் படிப்படியாக வருவாய் பெருகியுள்ளது: அருண் ஜேட்லி

பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பிறகான ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழுவுடனான பாரம்பரிய சந்திப்பு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கலந்துகொண்டார். அப்போது இந்த அரசின் கடைசி நிதியாண்டுக்கான நிதி மற்றும் பட்ஜெட் கூட்டத் தொடரின் சிறப்பம்சங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

2018-19 நிதியாண்டுக்கான இடைக்கால ஈட்டுத்தொகையாக ரூ.28 ஆயிரம் கோடியை ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு எதிர்பார்க்கிறது. இக்கூட்டத்தின் பின்னர் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டாக நாட்டின் வருவாய் அளவு படிப்படியாக அதிகரித்துள்ளது. தற்போதைய சூழலில் இந்தியாவுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மிகப்பெரிய வங்கிச் சேவைகள் தேவைப்படுகிறது. ஏனென்றால் அவற்றின் செயல்பாடுகள் மிகவும் உறுதியாக இருக்கும். குறிப்பாக வட்டி முதல் பொருளாதார வளர்ச்சி வரை இதுபோன்ற மிகப்பெரிய வங்கிச் சேவைகளால் அதிகளவிலான உதவிகள் கிடைக்கப்பெறும் என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com