பெங்களூரு எலஹங்கா அருகே விமானப் படை பயிற்சியின்போது நடுவானில் மோதி விபத்துக்குள்ளான இலகுரக விமானங்கள்.
பெங்களூரு எலஹங்கா அருகே விமானப் படை பயிற்சியின்போது நடுவானில் மோதி விபத்துக்குள்ளான இலகுரக விமானங்கள்.

பயிற்சி விமானங்கள் மோதல்: விமானி பலி- இருவர் காயம்

பெங்களூரில் விமானப் படை பயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை பயிற்சியில் ஈடுபட்ட இலகுரக விமானங்கள் மோதிக் கொண்டதில் விமானி


பெங்களூரில் விமானப் படை பயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை பயிற்சியில் ஈடுபட்ட இலகுரக விமானங்கள் மோதிக் கொண்டதில் விமானி ஒருவர் உயிரிழந்தார். மேலும், 2 பேர் காயமடைந்தனர். 
பெங்களூரில் புதன்கிழமை நடைபெறவுள்ள விமான தொழில் கண்காட்சியையொட்டி, பெங்களூரு எலஹங்கா அருகே விமானப் படை பயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை சாகச பயிற்சியில் ஈடுபட்ட சூரிய கதிர்கள் 7 குழுவைச் சேர்ந்த இலகுரக போர் விமானங்கள், ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இதில் இரண்டு விமானங்களும் தீயில் எரிந்து கருகின.
2 விமானங்களிருந்த விங் கமாண்டர் சாகில்காந்தி, தேஜஸ்வர்சிங், விஜய் ஷால்கி ஆகிய மூன்று விமானிகளும் பாராசூட் மூலம் கீழே குதித்தனர். இவர்களில் விங் கமாண்டர் சாகில்காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார். மற்ற இருவரும் கமண்டோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்கு விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணம் எனக் கூறப்படுகிறது. புதன்கிழமை விமான தொழில் கண்காட்சி தொடங்கியிருந்த நிலையில், விமானங்கள் மோதிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com