ஜம்முவில் ஊரடங்கு தளர்வு

ஜம்முவில் கடந்த 4 நாள்களாக வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நிகழாததையடுத்து, நகர் முழுவதும் புதன்கிழமை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.


ஜம்முவில் கடந்த 4 நாள்களாக வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நிகழாததையடுத்து, நகர் முழுவதும் புதன்கிழமை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎஃப் படையினர் பயணித்த வாகனம் மீது வெடிபொருள் நிரப்பிய காரை மோதச் செய்து, தற்கொலைப் படை பயங்கரவாதி தாக்குதல் நடத்தினார். 40 வீரர்களின் உயிரை பலிகொண்ட இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக ஜம்முவில் போராட்டங்கள் வெடித்தன. பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததால், கடந்த வெள்ளிக்கிழமை முதல் அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனிடையே, வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நிகழாததைத் தொடர்ந்து, குறிப்பிட்ட காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மட்டும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வந்தது. 
இந்நிலையில், நகர் முழுவதும் புதன்கிழமை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருந்தது. எனினும், சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதற்காக, 144  தடை உத்தரவு தளர்த்தப்படவில்லை.
நகரில் காய்கறிகள், பால் உள்ளிட்ட பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், ஏடிஎம்கள் செயல்படவில்லை என்றும் மக்கள் புகார் 
தெரிவித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com