தேசப் பாதுகாப்பு விஷயத்தில் காங்கிரஸ் பாடம் கற்க வேண்டியுள்ளது:  அருண் ஜேட்லி

நமது நாட்டை 50 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்துள்ள காங்கிரஸ் கட்சி தேசப் பாதுகாப்பு விஷயத்தில் இன்னும் அதிகம் கற்றுக் கொள்ள
தேசப் பாதுகாப்பு விஷயத்தில் காங்கிரஸ் பாடம் கற்க வேண்டியுள்ளது:  அருண் ஜேட்லி


நமது நாட்டை 50 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்துள்ள காங்கிரஸ் கட்சி தேசப் பாதுகாப்பு விஷயத்தில் இன்னும் அதிகம் கற்றுக் கொள்ள வேண்டிய நிலையிலேயே உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேசிய பாதுகாப்பு திட்டம் ஒன்றை காங்கிரஸ் தயாரித்து வருகிறது. இந்தத் திட்டத்தை தயாரிக்கும் குழுவின் பல்வேறு துறை வல்லுநர்கள் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவுக்கு தலைமை வகிக்கும் முன்னாள் ராணுவ அதிகாரி டி.எஸ்.ஹூடா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். கடந்த 2016-ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்த துல்லியத் தாக்குதல் நடவடிக்கையை திட்டமிட்டு நடத்தியது ஹூடா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மிகமோசமான பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்துள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு குறித்து திட்டம் வகுக்க காங்கிரஸ் கட்சி குழு ஒன்றை அமைத்திருப்பது அரசியல்ரீதியாக பாஜகவுக்கு பதிலடி தரும் நடவடிக்கையாக கருதப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக தனது இணையதளப் பக்கத்தில் அருண் ஜேட்லி கூறியிருப்பதாவது:
ஹூடா மிகச்சிறந்த ராணுவ அதிகாரியாக இருந்தவர் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அவர் நிச்சயமாக காங்கிரஸ் கட்சிக்கு நல்ல ஆலோசனைகளைத் தருவார். எனினும், நாட்டை 50 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி புரிந்த பிறகும் தேசப் பாதுகாப்பு விஷயத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சிக்கு இப்போதுவரை தெரியவில்லை என்பது வியப்பை அளிக்கிறது. இது விஷயத்தில் காங்கிரஸ் பாடம் கற்க வேண்டியுள்ளது.
ஏனெனில், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியா பிரிந்து நிற்கிறது என்ற கருத்தையை காங்கிரஸ் கட்சி ஏற்படுத்துகிறது. பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் கூட இந்தியாவில் பிளவு இருக்கிறது என்ற சர்வதேச சமூகம் கூறும்வகையில் காங்கிரஸ் நடந்து கொள்ளக் கூடாது. உலகமே இந்தியாவுக்கு ஆதரவாக திரண்டுள்ள இந்த நேரத்தில், அதனைக் கெடுக்கும் வகையில் காங்கிரஸ் செயல்படக் கூடாது.
நமது ராணுவம் மிகவும் கட்டுக்கோப்பானது. நமது நாட்டுக்காக வெகு சிறப்பாக பணியாற்றி வருகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் உத்தரவுகளுக்கு ஏற்ப ராணுவம் செயல்படுகிறது. உள்நாட்டு அரசியல் பிரச்னைகளில் இருந்து ராணுவம் முழுமையாக விலகியே இருக்கிறது. எனவே, அரசியல்வாதிகளின் கருத்துகள், ராணுவத்தினர் மற்றும் ராணுவ அதிகாரிகளின் சேவைகளை தவறாக விமர்சிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்று ஜேட்லி கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com