புல்வாமா தாக்குதல் குறித்த தகவல் மோடிக்கும், மத்திய அரசுக்கும் முன்கூட்டியே தெரியும்: மம்தா பானர்ஜி

புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த சிஆர்பிஎஃப் வீரர்களின் ரத்தத்தில் பிரதமர் மோடி அரசியல் செய்கிறார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (திங்கள்கிழமை) குற்றம்சாட்டினார். 
புல்வாமா தாக்குதல் குறித்த தகவல் மோடிக்கும், மத்திய அரசுக்கும் முன்கூட்டியே தெரியும்: மம்தா பானர்ஜி


புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த சிஆர்பிஎஃப் வீரர்களின் ரத்தத்தில் பிரதமர் மோடி அரசியல் செய்கிறார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (திங்கள்கிழமை) குற்றம்சாட்டினார். 

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மைய குழுவில் அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது,  

"மோடி அவர்களே, தாக்குதல் சம்பவம் நடைபெறும் போது நீங்கள் எங்கு இருந்தீர்கள்? இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்கூட்டியே இதுபோன்ற சம்பவம் நிகழும் என்பது உங்களுக்கு தெரியும். உங்களுக்கு முன்னதாகவே தகவல் கிடைத்தது.  

மத்திய அரசிடம் தாக்குதல் தொடர்பான உளவுத்துறை தகவல்கள் இருந்தது. பிறகு ஏன் அவர்களுக்கு விமானப் படை சேவை வழங்கவில்லை? எதற்காக அவர்களை உயிரிழக்கவிட்டீர்கள்? தேர்தலுக்கு முன் இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டும் என்பதற்காகவா? நமது வீரர்களின் ரத்தத்தை வைத்து இப்படி அரசியல் செய்யக்கூடாது. 

அமைத்திக்கான தூதுவராக பிரதமர் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அவரது கட்சியினர் நாட்டில் போர் சூழலை உருவாக்கி, கலவரத்தை உண்டாக்க ரகசியமாக முயற்சிக்கின்றனர். 

வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரம் எப்படி செயல்படுகிறது என்பதை நமது (திரிணமூல் காங்கிரஸ்) தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும். வாக்கு எண்ணிக்கையின் போது, இந்த விஷயத்தில் பயிற்சி பெற்றவர்களையே பிரதிநிதியாக நியமிக்கவேண்டும். 

இதற்காக ஒரு சிறிய கமிட்டியை அமைக்கிறேன். தினேஷ் திரிவேதி, சௌகதா ராய் மற்றும் பார்த்தா சாட்டர்ஜி ஆகியோர் இந்த கமிட்டியில் இடம்பெறுகிறார்கள். அவர்கள் வாக்கு இயந்திரம் மற்றும் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரம் குறித்து மாவட்ட அளவிலான தலைவர்களுக்கு பயிற்சியளிப்பார்கள். 

பாஜகவை, இந்த இயந்திரங்களில் வாக்குகளை மாற்றுவதற்கு நாம் விடக்கூடாது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com