காட்டுத்தீயை கட்டுப்படுத்த முழுவீச்சில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன: குமாரசாமி

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பக எல்லையை அடுத்து கர்நாடக மாநிலத்தில் பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. 
காட்டுத்தீயை கட்டுப்படுத்த முழுவீச்சில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன: குமாரசாமி

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பக எல்லையை அடுத்து கர்நாடக மாநிலத்தில் பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்குள்ள வனத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட திடீர் காட்டுத் தீயால் 2,500 ஏக்கர் காடுகள் எரிந்து சாம்பலானது.   

காட்டுத்தீயை அணைக்கும் பணியில் பலநூறு பேர் கடந்த 3 தினங்களாக கடுமையாகப் போராடி வருகின்றனர். இத்தீவிபத்து காரணமாக தமிழக, கர்நாடக எல்லைப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, செய்தியாளர்களை திங்கள்கிழமை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். இதையடுத்து 4 ஹெலிகாப்டர்களை வழங்குவதாக மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டுள்ளன. 

காட்டுத்தீ குறித்து முழுவதுமாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. வனத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்துவது தொடர்பாக தீவிரமாக தீவிரமாக முயற்சி மேற்கொண்டு, மேலும் பரவாமல் இருக்க கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com