தேசிய போர் நினைவகம்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

தில்லியில் இந்தியா கேட் பகுதியில் தேசிய போர் நினைவகத்தை பிரதமர் மோடி திங்கள்கிழமை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 
தேசிய போர் நினைவகம்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

தில்லியில் இந்தியா கேட் பகுதியில் தேசிய போர் நினைவகத்தை பிரதமர் மோடி திங்கள்கிழமை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சர்வதேச அளவில் போட்டி நடத்தி இந்த வடிவம் இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டது.

இந்த நினைவகம் 40 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. படியேறிச் செல்வதற்கான இடைவெளியுடன் கூடிய ஒரு பெரிய வட்ட வடிவிலான அடித்தளமும், அதன் மையப் பகுதியில் சதுர வடிவில் மேடையும் அமைந்துள்ளது. அதன் நடுவில் அணையா விளக்குடன் கூடிய ஸ்தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 1971ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக இந்தியா கேட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள அமர் ஜவான் ஜோதி அங்கேயே இருக்கும். தேசியப் போர் நினைவகம் அமைக்க ரூ.176 கோடி செலவானது. 

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தில் நம் நாட்டுக்காக உயிரிழந்த வீரர்களுக்காகவும், புல்வாமா வீரர்களுக்காகவும் அஞ்சலி செலுத்துகிறேன். கடந்த பல வருடங்களாக தேசிய போர் நினைவகத்துக்கான கோரிக்கை வலுத்து வந்தது. அதுவும் கடந்த 10 ஆண்டுகளில் இந்த நினைவகத்தை ஏற்படுத்த இருமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், அவை யாவும் நிறைவேறவில்லை. கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கி தற்போதைய அரசு உங்கள் அனைவரின் ஆசியுடனும் தேசிய போர் நினைவகத்தை வெற்றிகரமாக ஏற்படுத்தியுள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com