பெங்களூரில் கார் தீ விபத்து பகுதியில் நிர்மலா சீதாராமன் ஆய்வு

கர்நாடக மாநிலம், பெங்களூரில் கார்கள் கொழுந்துவிட்டு எரிந்து தீக்கிரையான பகுதியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
பெங்களூரில் கார் விபத்து நிகழ்ந்த பகுதியை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட  பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
பெங்களூரில் கார் விபத்து நிகழ்ந்த பகுதியை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட  பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

கர்நாடக மாநிலம், பெங்களூரில் கார்கள் கொழுந்துவிட்டு எரிந்து தீக்கிரையான பகுதியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
இதுகுறித்து பாதுகாப்புப் படை செய்தித்தொடர்பாளர் கூறியதாவது: பெங்களூரில் விமானப் படைத் தளத்துக்கு அருகே வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் 300 கார்கள் எரிந்த பகுதியை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு செய்தார்.
விபத்து குறித்து அவரிடம் விமானப் படை அதிகாரிகள், தீயணைப்புப் படை டிஜி, பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவர் ஆகியோர்  எடுத்துரைத்தனர்.
ஒரு காரின் சைலன்ஸர் அதிக சூடாக இருந்திருக்கலாம் என்றும் அதன்காரணமாக தீப்பிடித்து அது மளமளவென அனைத்து கார்களுக்கும் பரவி இருக்கலாம் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். வாகனங்களை பறிகொடுத்தவர்கள் குறித்து கவலைப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  தீ விபத்து ஏற்பட்டதும் துரிதமாக அதிகாரிகள் செயல்பட்டனர். பல கார்கள் தீ விபத்து பகுதியிலிருந்து மீட்கப்பட்டன. இந்த தீ விபத்து குறித்து நீதிமன்ற விசாரணைக்கு இந்திய விமானப் படை உத்தரவிட்டுள்ளது. சேதமடைந்த வாகனங்களுக்கு காப்பீடு பெற விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்களைப் பெற 080-22942536 என்ற உதவி எண் அளிக்கப்பட்டுள்ளது என்று அந்தச் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com