தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முதல் நபர் விஜய் மல்லையா

வங்கிக் கடன் பெற்றுவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முதல் நபர் விஜய் மல்லையா

வங்கிக் கடன் பெற்றுவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பொருளாதாரக் குற்றவாளி என்பதால் மல்லையாவின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்யலாம் என்றும், மல்லையா மேல்முறையீடு செய்ய அவகாசம் ஏதும் அளிக்க முடியாது என்றும் மும்பை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில், இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தப்பியோடும் பொருளாதாரக் குற்றவாளிகளுக்கான சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்த பிறகு, தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக விஜய் மல்லையா அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் பணமோசடியில் ஈடுபட்டு பிரிட்டனில் வசித்து வரும் விஜய் மல்லையாவை பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது.

பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த இவ்வழக்கு மீதான விசாரணை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ஆஸ்மி, விஜய் மல்லையாவை பொருளாதாரக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.

முன்னதாக, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி பணமோசடியில் ஈடுபட்டது தொடர்பாக விஜய் மல்லையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com