தில்லி வாக்காளர் பட்டியலில் 30 லட்சம் பேர் நீக்கம்?

தில்லி வாக்காளர் பட்டியலில் சுமார் 30 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பாஜகவின் பங்கு உள்ளதாகவும் ஆளும் ஆம் ஆத்மி கட்சி கடுமையாகச் சாடியுள்ளது.
தில்லி வாக்காளர் பட்டியலில் 30 லட்சம் பேர் நீக்கம்?

தில்லி வாக்காளர் பட்டியலில் சுமார் 30 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பாஜகவின் பங்கு உள்ளதாகவும் ஆளும் ஆம் ஆத்மி கட்சி கடுமையாகச் சாடியுள்ளது.

இது தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் ராகவ் சத்தா செய்தியாளர்களிடம் கூறுகையில்,  2015-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு இதுவரை சுமார் 30 லட்சம் வாக்களர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும்,  அது தொடர்பான பட்டியலையும் அவர் வெளியிட்டார். மேலும் அவர் கூறியதாவது:  வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டதில் பாஜகவின் பங்கு உள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. மேலும், வாக்காளர்கள் பெயர்கள் நீக்கத்திற்கு சான்று ஒப்பம் பெறப்பட்டுள்ள நகல்கள் ஆம் ஆத்மியிடம்  உள்ளன.  

பாஜக தலைவர்களின் அறிவுறுத்தலின் பேரில், தேர்தல் ஆணைய அதிகாரிகளின் உடந்தையுடன் சுமார் 30 லட்சம் பேர் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 2015-ஆம் ஆண்டு  சட்டப்பேரவைத் தேர்தலில் அடைந்த படுதோல்விக்குப் பழிதீர்க்கும் விதமாக, இதுபோன்ற செயல்களில் பாஜக ஈடுபட்டுள்ளது என்றார் அவர். பாஜக பதிலடி: ஆனால், சுமார் 30 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி பொய்ப் புகார் கூறி வருகிறது என பாஜக மூத்த தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா தெரிவித்துளளார்.

அவர் கூறுகையில், இந்த விஷயத்தில் ஆம் ஆத்மி கட்சியினர், மக்களிடம் தவறான தகவல்களைக் பரப்பி வருகின்றனர். 2015-2018 வரையிலான காலத்தில் மொத்தம் 3.05 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் புள்ளி விவரத்தில் இருந்து தெரிய வந்துள்ளது. மேலும், ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டு "சேவல் மற்றும் காளை கதை' போன்று  உள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com