மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்றால்.. அமித் ஷாவின் அதிர்ச்சி தரும் பேச்சு

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்றால் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா ஒரு அதிர்ச்சி தரும் உரையை ஆற்றியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்றால்.. அமித் ஷாவின் அதிர்ச்சி தரும் பேச்சு


புது தில்லி: வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்றால் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா ஒரு அதிர்ச்சி தரும் உரையை ஆற்றியுள்ளார்.

தில்லியில் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தைத் துவக்கி வைத்த போதுதான் அமித் ஷா இவ்வாறு பேசினார்.

அதாவது அவர் பேசுகையில், வரும் மக்களவைத் தேர்தல் 3வது பானிபட் போருக்கு சமம். இந்த தேர்தலில் பாஜக தோற்றால், நாடு 200 ஆண்டுகள் அடிமையானதைப் போல் ஆகிவிடும்.

1761ல் மராத்தாக்கல், முகலாலயப்படையிடம் தோற்றதால்தான் இந்திய நாடே 200 ஆண்டுகள் ஆங்கிலேயரிடம் அடிமையாக இருக்க வேண்டியதாயிற்று. எனவே, வரும் மக்களவைத் தேர்தல் நாட்டுக்கு மிகவும் முக்கியம். 

மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும். பிரதமர் மோடியை யாராலும் வீழ்த்த முடியாது. அவர் ஒரு போர்வீரன். எத்தனை கட்சிகள் ஒன்றிணைந்தாலும் அவரை வீழ்த்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 2014ம் ஆண்டு தேர்தலின் போது வென்ற இடங்களை விட கூடுதல் இடங்களை பாஜக வெல்லும் என்றும் அமித் ஷா கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com