சுடச்சுட

  

  முதல்முறை வாக்காளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 13th January 2019 05:29 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi


  புதுதில்லி: வரும் மக்களவைத் தேர்தலில் முதல் முறை வாக்காளர்களுக்கு முக்கியத்துவம் அளித்து கவருவத்தில் தமிழக பாஜகவினர் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

  வரும் மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் குறித்து மயிலாடுதுறை, சிவகங்கை, தேனி, பெரம்பலூர், விருதுநகர் ஆகிய 5 தொகுதிகளைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். 

  அப்போது பேசிய அவர், வளர்ச்சியை மட்டுமே முதல்முறை வாக்காளர்கள் எதிர்ப்பார்ப்பதாகவும், வாக்குறுதிகளில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. ஆனால், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகிறதா என்பதில் கவனமாக இருப்பதாவும், வாரிசு அரசியலை முதல்முறை வாக்காளர்கள் அறவே வெறுக்கிறார்கள். எனவே, முதல்முறை வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களின் வாக்குகளை பாஜகவின் பக்கம் திருப்ப வேண்டும். பாஜகவில் மட்டுமே சாதாரண மக்கள் கூட உயர்பதவிக்கு வர முடியும் என்றார். 

  மேலும், ஒவ்வொரு நிலையிலும் நாட்டின் நலனுக்காவும் வளர்ச்சி என்னும் குறிக்கோளுடன் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக நாமும், மறுபுறத்தில் உள்ளவர்கள் தங்களுக்கென்று சொந்த சாம்ராஜ்ஜியத்தை கட்டியெழுப்பதற்காக பரம்பரை கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணிக்காக அணி திரண்டு உள்ளனர். மற்ற கட்சிகளைப்போல் ஓட்டு வங்கியை உருவாக்குவதற்காக நாம் பிரித்தாளும் அரசியலை நடத்தவில்லை. 

  பாஜகவுக்கு எதிராக அமையும் எந்த கூட்டணியும் நிலைக்காது. அது சுயநலத்துக்கான குறுகியகால கூட்டணியாக முடிந்துப் போகும் என்ற மோடி, எதிர்க்கட்சியினர் ஏகப்பட்ட குழப்பத்தில் இருப்பதாகவும், தன்னை பற்றி தவறாக பேசுவதற்கு ஏதும் கிடைக்காததால் இதற்கு முன்னர் எதிரியாக இருந்தவர்கள் கூட்டணி அமைத்துள்ளதாகவும்,  மோடி அரசு செயல்படாமல் இருந்திருந்தால் இப்படிப்பட்ட பொருந்தா கூட்டணிக்காக அவர்கள் ஏன் தேடிப்போக வேண்டும் என மோடி கேள்வி எழுப்பியுள்ளார். 

  உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்காக அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 38 இடங்களில் போட்டியிடுகின்றன. எனினும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோர் போட்டியிடும் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என்று இரு கட்சிகளும் கூறியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரு கட்சித் தலைவர்களும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது வெளியிட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai