குஜராத்: வேட்பாளர் தேர்வை விரைவில் தொடங்குகிறது காங்கிரஸ்

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், குஜராத் மாநிலத்தில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியை காங்கிரஸ் கட்சி விரைவில் தொடங்கவுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், குஜராத் மாநிலத்தில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியை காங்கிரஸ் கட்சி விரைவில் தொடங்கவுள்ளது.
 பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 26 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறவில்லை. இதையடுத்து, கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது; பாஜக 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
 இந்நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகளின் கூட்டம், குஜராத் மாநிலம், ஆமதாபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை கட்சியின் மாநில செய்தித்தொடர்பாளர் மணீஷ் தோஷி, செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
 இந்த ஆண்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமானது. இந்தத் தேர்தலில் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கு ஒரு குழு அமைக்கப்படும். அந்தக் குழு தேர்தலில் போட்டியிடத் தகுதியான நபர்களை விரைவில் தேர்வு செய்து, கட்சித் தலைமைக்கு அனுப்பி வைக்கவுள்ளது. அந்தப் பட்டியலை கட்சித் தலைமை பரிசீலித்து, வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்று இறுதிமுடிவெடுத்து, பின்னர் வேட்பாளர் பட்டியலை வெளியிடும்.
 வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்வதற்காக, ஒவ்வொரு தொகுதியிலும் காங்கிரஸýக்கு அதிக ஆதரவுள்ள வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து, அங்கு கட்சியை மேலும் வலுப்படுத்தும் பணிகளில் கட்சித் தொண்டர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும், வாக்காளர்களைத் தனித்தனியாகச் சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக, தேர்தல் பிரதிநிதிகள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com