சுடச்சுட

  

  கணினி கண்காணிப்பு: 6 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

  By DIN  |   Published on : 14th January 2019 12:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  supreme-court3


  கணினிகளை கண்காணிப்பது தொடர்பான அதிகாரங்களை சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளுக்கு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 6 வாரங்களில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

  நாட்டு மக்களின் கணினி பயன்பாடு உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் அதிகாரங்களை சிபிஐ, ரா உளவு அமைப்பு, தேசிய புலனாய்வு அமைப்பு, போதை பொருள் கட்டுப்பாட்டு துறை, புலனாய்வு துறை, அமலாக்கத் துறை, மத்திய நேரடி வரிகள் வாரியம், வருவாய் புலனாய்வு இயக்குநரகம், தில்லி காவல்துறை உள்ளிட்ட 10 விசாரணை அமைப்புகளுக்கு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 2 பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.  

  இந்த மனுக்கள் இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக 6 வாரங்களில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai