காமன்வெல்த் தீர்ப்பாய தலைவர் பதவியை நிராகரித்தார் நீதிபதி சிக்ரி

காமன்வெல்த் தீர்ப்பாய தலைவர் பதவிக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. சிக்ரியின் பெயரை இந்திய அரசு பரிந்துரைத்திருந்த நிலையில், அந்த வாய்ப்பை அவர் ஞாயிற்றுக்கிழமை நிராகரித்துவிட்டார்.

 முன்னதாக அரசின் பரிந்துரைக்கு கடந்த மாதம் ஒப்புதல் தெரிவித்திருந்த சிக்ரி, தற்போது அதை நிராகரித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. ஆண்டுக்கு 2 அல்லது 3 விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் நிலையில், அந்தத் தீர்ப்பாய தலைவர் பதவிக்கு ஊதியம் ஏதும் இருக்காது என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.
 நீதிபதி சிக்ரி, வரும் மார்ச் 6-ஆம் தேதி ஓய்வு பெறவுள்ள நிலையில், அவரை அந்தப் பதவிக்கு பரிந்துரைக்க கடந்த மாதம் முடிவு மேற்கொள்ளப்பட்டதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் பிறகு மூத்த நீதிபதியாக இருக்கும் சிக்ரி, சிபிஐ இயக்குநர் பொறுப்பிலிருந்து அலோக் குமார் வர்மாவை நீக்கிய 3 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவில் பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரோடு அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com