சுடச்சுட

  

  மாயாவதி பிறந்தநாள் விழாவில் களேபரம்: பிரித்துக்கொடுப்பதற்கு முன்பு பிரித்து மேயப்பட்ட கேக்- வைரலாகும் விடியோ

  By ANI  |   Published on : 15th January 2019 06:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mayawathi_birthday_celebration

   

  பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது 63-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து உத்தரப் பிரதேசம் முழுவதும் வருங்கால இந்திய பிரதமர் மாயாவதி எனும் வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

  இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹாவில் மாயாவதி பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக மிகப்பெரிய கேக் தயாராக இருந்தது. அப்போது ஏற்பட்ட களேபரங்களில் அங்கு கூடியிருந்தவர்கள் தங்கள் கைகளுக்கு கிடைத்த வரையில், அந்த கேக்கை திருடிச் சென்றனர். 

  முறையாக பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு அங்கு கூடியிருப்பவர்களுக்காகவே தயாரிக்கப்பட்டிருந்த அந்த மிகப்பெரிய கேக்கை பிரித்துக் கொடுப்பதற்கு முன்பே சூறையாடப்பட்ட சம்பவத்தின் விடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

  முன்னதாக, அவருடைய 60-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போதும் இதேபோன்று சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai