கும்பமேளா இடத்தில் தீ விபத்து: விசாரணைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில், கும்பமேளா நடைபெறவுள்ள இடத்தில் வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்
பிரயாக்ராஜில் கும்பமேளா விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த திகம்பர் அணி அகாரா பிரிவினரின் முகாமில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்புப் படை வீரர்கள்.
பிரயாக்ராஜில் கும்பமேளா விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த திகம்பர் அணி அகாரா பிரிவினரின் முகாமில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்புப் படை வீரர்கள்.


உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில், கும்பமேளா நடைபெறவுள்ள இடத்தில் வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, காவல் துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
பிரயாக்ராஜில் கும்பமேளா நடைபெறும் இடத்திலுள்ள திகம்பர் அணி அகாரா பிரிவினரின் முகாம் பகுதியில் இருந்த கூடாரம் ஒன்றில், திங்கள்கிழமை மதியம் 12.45 மணியளவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது. இதனால், கூடாரம் முழுவதும் தீப்பிடித்தது. அருகிலிருந்த கூடாரங்களுக்கும் தீ விரைவாகப் பரவியது.
இதைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு 10 நிமிடங்களில் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படை வீரர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. இந்தத் தீ விபத்தில் இரண்டு வாகனங்களும், பொருள்கள் சிலவும் சேதமடைந்துள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து, திகம்பர் அணி அகாரா முகாம் பகுதியின் தலைவர் கூறுகையில், கூடாரத்தின் அருகே ஏற்பட்ட தீப்பொறியினால், சமையல்கூடத்தில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்தது என்றார். 
விசாரணைக்கு உத்தரவு: இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கும்பமேளா விழாவுக்காக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் அனைத்தையும் ஆய்வு செய்யுமாறும் முதல்வர் வலியுறுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
கும்பமேளா விழா அதிகாரப்பூர்வமாக செவ்வாய்க்கிழமை (ஜன.15) தொடங்கும் நிலையில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com