உ.பி. கும்ப மேளாவில் இன்று 2-ஆவது புனித நீராடல்: பாதுகாப்பு அதிகரிப்பு

உத்தரப் பிரதேசத்தில் கும்ப மேளா விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச பெüர்ணமி புனித நீராடல் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி, பிரயாக்ராஜ் (அலாகாபாத்) நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கும்பமேளாவில் தைப்பூச பெüர்ணமியையொட்டி உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் (அலாகாபாத்) திரிவேணி சங்கமம் பகுதியில் நடைபெறவுள்ள சிறப்பு நீராட்டு நிகழ்ச்சிக்காக  குவிந்த துறவிகள்.
கும்பமேளாவில் தைப்பூச பெüர்ணமியையொட்டி உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் (அலாகாபாத்) திரிவேணி சங்கமம் பகுதியில் நடைபெறவுள்ள சிறப்பு நீராட்டு நிகழ்ச்சிக்காக  குவிந்த துறவிகள்.

உத்தரப் பிரதேசத்தில் கும்ப மேளா விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச பெüர்ணமி புனித நீராடல் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி, பிரயாக்ராஜ் (அலாகாபாத்) நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ்  நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் கும்ப மேளா விழா நடத்தப்படுகிறது. நிகழாண்டின் கும்ப மேளா விழா, கடந்த 15-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், முதலாவது புனித நீராடல் மகர சங்கராந்தி (தை மாதப்பிறப்பு) தினத்தில் நடைபெற்றது. இந்நிலையில், இரண்டாவது முக்கிய நிகழ்வான முழு பெüர்ணமி புனித நீராடல் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இதனால், நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் பிரயாக்ராஜ் நகரில் குவியத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை ஏடிஜிபி ஆனந்த் குமார், செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பெüர்ணமி புனித நீராடலில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவுக்கு வருகை தரும் ஒவ்வொரு பக்தருக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் முக்கிய நோக்கம். எந்தவித அசம்பாவித சம்பவமும் நேரிட விடமாட்டோம். தகவல் தொழில்நுட்ப உதவியுடன் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 
இதுவரை இல்லாத அளவில், நிகழாண்டு நடைபெறும் கும்ப மேளா விழா மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்றார் அவர்.
மேலும், விழா பாதுகாப்பு குறித்து காவல் துறை டிஜிபி ஓ.பி.சிங் கூறியதாவது:
கும்ப மேளா விழாவையொட்டி, பிரயாக்ராஜ் நகரம் முழுவதும் 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 20 ஆயிரம் போலீஸார், 6,000 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 40 காவல் நிலையங்கள், 58 சோதனைச் சாவடிகள், 40 தீயணைப்பு நிலையங்கள் ஆகியவற்றில் இருந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை தவிர, மத்திய பாதுகாப்புப் படையின் 80 கம்பெனி படைகள், தீவிரவாதத் தடுப்பு பிரிவு படையினர், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் ஆகியோரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார் அவர்.
பிரயாக்ராஜ் நகரில், திங்கள்கிழமை நடைபெறும் இரண்டாவது புனித நீராடலுக்குப் பிறகு, பிப்ரவரி 4 (அமாவாசை நீராடல்), பிப்ரவரி 10 (வசந்த பஞ்சமி), பிப்ரவரி 19 (மகி பெüர்ணமி), மார்ச் 4 (மகா சிவராத்திரி) ஆகிய நான்கு தினங்களில் புனித நீராடல் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com