நான் எப்போதும் உற்சாகமாக இருப்பதற்குக் காரணம் என்ன? மோடி போட்டுடைத்த ரகசியம்

பிரபலமான பேஸ்புக் பக்கமான 'மும்பை மனிதர்கள்' சார்பில் எடுக்கப்பட்ட பேட்டியில், பிரதமர் மோடி பல விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார்.
நான் எப்போதும் உற்சாகமாக இருப்பதற்குக் காரணம் என்ன? மோடி போட்டுடைத்த ரகசியம்

பிரபலமான பேஸ்புக் பக்கமான 'மும்பை மனிதர்கள்' சார்பில் எடுக்கப்பட்ட பேட்டியில், பிரதமர் மோடி பல விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார்.

அந்த பேட்டியில் தனது தொண்டர்களுக்கும் குறிப்பாக இளைய நண்பர்களுக்கும் சில அறிவுரைகளையும் அவர் வழங்கியுள்ளார்.

பேட்டியில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ஒட்டி 5 நாட்கள் ஆள் அரவமற்ற காட்டுப் பகுதிக்குச் சென்றுவிடுவேன். அங்கு சுத்தமான காற்றும், குடிநீரும் கிடைக்கும். மனிதர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், இதுவே தனது உற்சாகமான வாழ்க்கைக்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதாவது, இளைஞர்களே, உங்களது மிக வேகமான வாழ்க்கை முறையில் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருவது ஒன்றுதான். வேகமான வாழ்க்கைக்கு இடையே சுய பரிசோதனை செய்ய நேரம் ஒதுக்குங்கள். அதாவது நேரத்தை மறந்துவிடுங்கள். முழுக்க முழுக்க சிந்தனையில் இறங்குங்கள். இது உங்களது செயல்பாடுகளை மாற்றும். உங்களுக்குள் இருக்கும் உங்களை சரியாக புரிந்து கொள்ள அது உதவும் என்று மோடி தெரிவித்துள்ளார்.

வாழ்கிறோம் என்ற வார்த்தையை அர்த்தப்படுத்தும் வகையில் வாழுங்கள். மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை விட, உங்களைப் பற்றி உங்களுக்கு அதிக நம்பிக்கை பிறக்கும். எதிர்காலத்தை எதிர்கொள்ள அது உதவும். உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் நினைவு கூற விரும்புவது என்னவென்றால், நீங்கள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள், வெளியில் இருக்கும் வெளிச்சத்தைத் தேடாதீர்கள். அது உங்களுக்குள்ளேயே இருக்கிறது என்று கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com