சபரிமலை தொடர்புடைய மனுக்கள் 30ஆம் தேதிக்கு பிறகு விசாரணை: உச்சநீதிமன்றம்

சபரிமலை தொடர்புடைய மேல்முறையீட்டு மனுக்களை வரும் 30ஆம் தேதிக்கு பிறகே விசாரணைக்கு எடுத்துக் கொள்வது குறித்து அறிவிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
சபரிமலை தொடர்புடைய மனுக்கள் 30ஆம் தேதிக்கு பிறகு விசாரணை: உச்சநீதிமன்றம்

சபரிமலை தொடர்புடைய மேல்முறையீட்டு மனுக்களை வரும் 30ஆம் தேதிக்கு பிறகே விசாரணைக்கு எடுத்துக் கொள்வது குறித்து அறிவிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
சபரிமலை தொடர்புடைய மனுக்கள் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருவதாக இருந்தது. அந்த மனுக்களை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவரான இந்து மல்ஹோத்ரா மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதால் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
எனினும், இந்த விவகாரத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு, தேசிய ஐயப்பப் பக்தர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் மாத்யூ ஜே நெடும்பாரா நினைவூட்டினார்.
அதற்கு, நீதிபதி இந்து மல்ஹோத்ரா வரும் 30ஆம் தேதி வரை மருத்துவ விடுப்பில் உள்ளார். அவர் மீண்டும் பணிக்கு வந்த பிறகே சபரிமலை தொடர்புடைய மனுக்களை எப்போது விசாரிப்பது என்பது குறித்த அறிவிப்பை தெரிவிக்க முடியும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு தெரிவித்தது. சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து பல்வேறு தரப்புகளிலிருந்து மறுஆய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் 22ஆம் தேதி விசாரணைக்கு வருவதாக இருந்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com