இந்து பெண்ணை தொட்டால் கையை வெட்டுங்கள்: மத்திய அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

நமது சமுதாயத்தின் முன்னுரிமைகள் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும். சாதியைப் பற்றி சிந்திக்க கூடாது. சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த பெண்கள்,
இந்து பெண்ணை தொட்டால் கையை வெட்டுங்கள்: மத்திய அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

  
குடகு:  இந்து பெண்களை யாராவது தொட்டால், அவரின் கையை வெட்டுங்கள் என்று மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் இணை அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே, அவ்வப்போது ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி ஆக்ரோஷமாக பேசி சர்ச்சையில் சிக்குவது வழக்கமான ஒன்றுதான்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மாதாபுராவில் நேற்று இந்து அமைப்புகள் நடத்தி நிகழ்ச்சி ஒன்றில் மத்திய இணையமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே கலந்துகொண்டு பேசுகையில், நமது சமுதாயத்தின் முன்னுரிமைகள் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும். சாதியைப் பற்றி சிந்திக்க கூடாது. சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த பெண்கள், குடகில் மறைந்திருப்பதாக தகவல் வந்துள்ளது. அத்தகைய தேச துரோகிகளுக்கு இங்கு இடம் தரக்கூடாது. அவர்கள் இங்கு வந்தால், மண்ணோடு மண்ணாக்குங்கள். இந்து பெண்களை யாராவது தொட்டால், அவர்களின் கையை வெட்டுங்கள் என்றும், இந்து மக்கள் மீதான கேரள அரசின் அடக்குமுறை பட்டப்பகலில் நடந்த பாலியல் வன்கொடுமை என்று கூறினார் அனந்த்குமார் ஹெக்டே.  

மத்திய அமைச்சர் ஒருவரின் பொறுப்பற்ற பேச்சின் சர்ச்சைகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. 

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி உக்ரப்பா, அனந்தகுமார் ஹெக்டேவின் பேச்சு தவறானது. அவர் தனது மனநிலையை இழந்துவிட்டார் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது என்றவர் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.  

இதனிடையே, அனந்தகுமார் ஹெக்டேவின் பேச்சுக்கும், பாஜகவுக்கும் தொடர்பு இல்லை. அவரது பேச்சை பாஜக நியாயப்படுத்தாது என்று கர்நாடக பாஜக செய்தித்தொடர்பாளர் மதுசூதன் கூறியுள்ளார். 

தட்சிண கன்னடா, கார்வார், சிவமொக்கா ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மட்டும் தான் கன்னடத்தை சரியாக பேசவும், எழுதவும் செய்கிறார்கள். மற்ற மாவட்ட மக்கள் கன்னடத்தை அப்படி பேசுவது பேசுவதும், எழுதுவதும் என்று தெரியவில்லை. அவர்கள் கன்னட மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி மன்னிப்பு கோரினார். 

‛மதச்சார்பின்மைவாதிகள், முற்போக்காளர்கள் என கூறிகொள்பவர்கள், உண்மையில் தங்கள் பெற்றோர் மற்றும் தங்கள் ரத்தத்தின் அடையாளம் இல்லாதவர்கள். மக்கள் தங்களின் ஜாதி-மத அடையாளத்தை கண்டுகொள்ள வேண்டும். நீங்கள் யார் என்று சொன்னால் அதற்கு நான் தலைவணங்குகிறேன் என்று பேசி சர்ச்சையில் சிக்கி, மக்களவையில் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com