சுடச்சுட

  

  மும்பையில் பெய்யும் பேய்மழை: 72 மணி நேரத்தில் 4வது விபத்து; 6 தொழிலாளர்கள் பலி

  By ANI  |   Published on : 02nd July 2019 01:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Pune_wall_collapse


  புனே: மும்பையில் பெய்து வரும் கன மழை காரணமாக புனேவில் சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்ததில் 6 தொழிலாளர்கள் பலியாகினர். 3 பேர் காயமடைந்தனர்.

  கடந்த 24 மணி நேரமாக மும்பையில் பெய்து வரும் கன மழை காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

  இன்று அதிகாலை 1.15 மணிக்கு சின்ஹபத் கல்லூரி வளாகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் பலியாகினர். 3 பேர் காயமடைந்தனர்.

  2 நாட்களுக்கு முன்பு கொந்தவா சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் புனேவில் 15 பேர் பலியான சம்பவத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சி நீங்குவதற்குள் அடுத்த சம்பவம் நடந்தேறியுள்ளது.

  மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 72 மணி நேரத்தில் வெவ்வேறு இடங்களில் 4 சம்பவங்கள் நடந்துள்ளன. கன மழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கையாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai